தமிழகத்தில் இலங்கை (Sri lanka) தமிழ் அகதிப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் சடலமானது நேற்று காலை கொளத்தூர் பகுதியில் உள்ள வீட்டில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
அவர் இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் என தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மரணத்துக்கான காரணம்
இலங்கை தமிழர் அகதிகள் முகாமைச் சேர்ந்த 38 வயதுடைய கணேசமூர்த்தி சரஸ்வதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
எனினும் அவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் பிரேத பரிசோதனைக்காக அவரது சடலம் கீழ்பாக்கம் அரச வைத்தியசாலைக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.