ஊடகவியலாளர் ஆர்.எஸ்.ரஞ்சன் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (19) மாலை உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
கிளிநொச்சியைச் சேர்ந்த ரஞ்சன் 2006 ஆம் ஆண்டு முதல் பல்வேறு ஊடக நிறுவனங்களில் சுயாதீன ஊடகவியலாளராகப் பணியாற்றி வந்திருந்தார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, தொழிலதிபரும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவருமான அழகசுந்தரம் கிருபாகரன் காலமாகியுள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் (Jaffna) போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (19) மாலை உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

