தமிழகம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினரால்
விரட்டியடிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழக கடற்றொழிலாளர்களை கோடிட்டு தமிழக ஊடகங்கள் இதனை செய்தியாக்கி வருகின்றன.
கடற்படை மறுப்பு
பருவகால மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ராமேஸ்வரத்தைச்
சேர்ந்த கடற்றொழிலாளர்கள், கடலில் மீன்பிடிக்கச் சென்றபோதே, அவர்கள்
தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவுக்கும் தனுஸ்கோடிக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய கடல் பகுதியில்
இலங்கை கடற்படையினர் தம்மை விரட்டியடித்ததாக தமிழக கடற்றொழிலாளர்கள் குற்றம்
சுமத்தியுள்ளனர்.
எனினும் இலங்கையின் கடற்படையினர் இந்தக்குற்றச்சாட்டை தொடர்ந்தும் மறுத்து
வருகின்றனர்.

