முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கச்சத்தீவில் தஞ்சமடையவுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்: தீவிரமடையும் போராட்டம்

இராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து கடற்றொழில் குடும்பத்தினரும் படகுகளில் சென்று கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தமிழக விசைப்படகு கடற்றொழில் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யேசுராஜா தெரிவித்துள்ளார்.

அதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி நேற்று (11.10.2025) இராமேஸ்வரத்தில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கச்சைத்தீவில் போராட்டம்

மேலும் கருத்து தெரிவித்த அவர், “நடுக்கடலில் இலங்கை கடற்படையால் கடற்றொழிலாளர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அதிகமாக நடைபெற்று வருகிறது.

கச்சத்தீவில் தஞ்சமடையவுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்: தீவிரமடையும் போராட்டம் | Tamil Nadu Fishermen S Protest

இலங்கை சிறையில் தவிக்கும் கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்கக் கோரியும், பாரம்பரிய கடல் பகுதியில் இலங்கை கடற்படை பிரச்சினையின்றி கடற்றொழிலில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அடுத்தக்கட்ட போராட்டத்தை நடத்தவுள்ளோம்.

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

பிரதமர் நினைத்தால் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அத்துமீறிய கடற்றொழிலாளர்கள்

இதேவேளை, தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி நேற்று (11.10.2025) இடம்பெற்ற போராட்டத்தில் ஏராளமான கடற்றொழிலாளர்களும், கைதான கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றிருந்தனர்.

கச்சத்தீவில் தஞ்சமடையவுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்: தீவிரமடையும் போராட்டம் | Tamil Nadu Fishermen S Protest

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கடந்த 8 ஆம் திகதி 30 கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் பயணித்த 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.