சுதந்திர தினத்தன்று எமது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான செய்தியோடு வருகை தருமாறும் அவர் வேண்டுகோள் விடு்த்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்தி்ப்பின் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
முரண்பாட்டின் விளைவு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டின் விளைவாக சந்தேகத்தின் பேரில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் எமது தமிழ் அரசியல் கைதிகள்.
இந்தநிலையில், 30 ஆண்டுகளாக அவர்கள் சிறைகளில் சொல்லெண்ணா துயரத்தை அனுபவித்துக் கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.