யாழ்ப்பாணம் (Jaffna) – தட்டாதெரு சந்தியில் வைத்து இரண்டு இளைஞர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்றையதினம் (18.04.2024) போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவர்களிடமிருந்து 52 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருள்
தடுப்பு காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில்
முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள் – கஜிந்தன்

