இலங்கையிலிருந்து வெளிநாட்டு சென்றால் அங்கு நல்ல வேலை கிடைக்கும் நன்றாக வாழலாம் என்று தற்கால இளைஞர்கள் தவறான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் என்று டாக்டர் சபேசன் சிதம்பரநாதன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”கடந்த காலங்களில் மாணவர்கள் சாதாரண தர பரீட்சை முடிந்த உடன் உயர்தர கல்வி மற்றும் பட்டப்படிப்பை பற்றியே சிந்தித்தனர் ஆனால் தற்போது வெளிநாடுகளுக்கு செல்வதற்கே முயற்சிக்கின்றனர்.
நீங்கள் கல்வியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு நல்ல ஒரு கல்வியாளராக இருந்தால் உங்களால் பல நல்ல தொழில்களை வெளிநாடுகளில் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால் கல்வி தகைமைகள் இன்றி வெளிநாடுகளுக்கு செல்பவர்கள், ஒழுங்கான வேலை இன்றி, ஆரோக்கியமான உணவின்றி மற்றும் தங்குமிடங்களும் இல்லாமல், இரவு பகலாக உழைக்கின்றனர் ஆனால் அதனை வெளியில் கூறுவதில்லை.”என தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கூறிய விடயங்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்…,