பொலநறுவை இரண்டாம் சிவாலயத்தில் மிகவும் பக்திபூர்வமாக சிவராத்திரி தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் இந்து அடியார்கள் கலந்து கொண்டு சிவனின் இஷ்ட சித்திகளை பெற்றனர்.
பொலநறுவையில் காணக்கூடிய இந்த 2ம் சிவாலயம் 10 ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டுவிக்கப்பட்டது எனக் கருதப்படுகின்றது.
பொலநறுவைக் காலத்தைச் சேர்ந்த மிகப் பழைய ஆலயம் இதுவாகும். இவ்வாலயம் “வானவன் மாதேவி ஈசுரமுடையார்” என அழைக்கப்பட்டதாக கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வரலாற்று சிறப்பு மிக்க இவ்வாலயத்தில் நடைபெற்ற சிவராத்திரி நிகழ்வுகளை வரலாற்று பதிவாக கொண்டு வந்துள்ளது ஐபிசி தமிழ்
https://www.youtube.com/embed/4AGp2ihiSyo