பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா (Ratan Tata) காலமானதை தொடர்ந்து நோயல் டாடா (Noel Tata), டாடா அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பையில் (Mumbai) இன்று (11) நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரரான இவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டாடா டிரஸ்ட் என்பது அனைத்து 14 டாடா அறக்கட்டளைகளின் செயல்பாடுகளையும் நிர்வகிக்கும் அமைப்பாகும்.
டாடா குழுமத்தை நிறுவிய பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1892 ஆம் ஆண்டில் நோயல் மற்றும் ரத்தனின் பெரியப்பா ஜம்செட்ஜி டாடா அவர்களால் டாடா டிரஸ்ட்ஸ் அமைக்கப்பட்டது.
நோயல் டாடா
டாடா அறக்கட்டளைகள் கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டுவசதி போன்ற பல்வேறு துறைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
நோயல் டாடா 2000-களின் முற்பகுதியில் இணைந்ததில் இருந்து டாடா குழுமத்தின் வளர்ச்சியில் முக்கிய நபராக விளங்கி வருகிறார்.
இவர்,டாடா ஸ்டீல், கடிகார நிறுவனமான டைட்டனின் துணைத் தலைவராக நோயல் டாடா உள்ளார்.
எப்போதும் ஊடக வெளிச்சத்தில் இருந்து விலகி இருப்பதை விரும்பும் நபராக நோயல் டாடா
2014 முதல் ட்ரெண்ட் லிமிடெட் தலைவராக பணியாற்றி வருகிறார்.
2019 இல் சர் ரத்தன் டாடா அறக்கட்டளையின் குழுவில் நோயல் டாடா சேர்ந்தார்.
இவர் 2018 இல் டைட்டன் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், மார்ச் 2022 இல் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
டாடா குழு
இதன் மூலம் அவர் டாடா குழுவிற்குள் தனது பங்கை மேலும் வலுப்படுத்தினார்.
ட்ரெண்டிற்குச் செல்வதற்கு முன், நோயல் டாடா 2010 மற்றும் 2021 க்கு இடையில் டாடா இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திற்கு தலைமை தாங்கினார்.
அவரது பணியின் போது, நிறுவனத்தின் வருவாய் $500 மில்லியனில் இருந்து $3 பில்லியனாக உயர்ந்தது.
வோல்டாஸ் லிமிடெட் மற்றும் டாடா ஸ்டீல் லிமிடெட் உள்ளிட்ட டாடா குழுமத்தின் பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் நோயல் டாடா உள்ளார்.
அவரது மூன்று குழந்தைகள் – நெவில், மாயா மற்றும் லியா – டாடா குடும்பத்துடன் இணைக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களின் அறங்காவலர்களாக பணியாற்றி வருகின்றார்.
பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவிற்கு நேற்று(10) மாலை அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.