ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பெப்ரவரி முதலாம் திகதி முதல் அனைத்து வகையான வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
குருநாகலில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது ஜனாதிபது இது குறித்து பேசியுள்ளார்.
இதன்போது, வெளிநாட்டு கையிருப்புகளில் வாகன இறக்குமதியின் தாக்கத்தை கவனத்தில் கொண்டு, இந்த முடிவு கவனமாக எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரி குறைப்பு
அத்தோடு, டொலர் வீதத்தின் அதிகரிப்பு காரணமாக வாகன விலைகள் அதிகமாகவே இருக்கும் என்றும் வாகனங்களுக்கான தேவை திடீரென அதிகரித்தால் மற்றொரு நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது என்பதால், தாங்கள் சில வரிகளை விதித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆரம்பத்தில் விலைகள் அதிகமாக இருந்தாலும், காலப்போக்கில் இந்த வரிகளைக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மேலும் கூறியுள்ளார்.