தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கான முன்னைய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தொழில் அமைச்சினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பளச் சபையின் ஊடாக கொடுப்பனவுகளை வழங்குவதற்கான புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
1700 ரூபா
இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமான 1700 ரூபாவை சம்பளச் சபையின் ஊடாக வழங்குவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 1ம் திகதி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக உயர்த்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.
தோட்டத் தொழிலாளி ஒருவரின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக நிர்ணயித்து தொழில் அமைச்சர் முன்னதாக வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.
தொழில் அமைச்சு
1,350 சம்பளப்பணமாகவும், உதவித் தொகையாக 300 ரூபாவாகவும், மற்றும் மற்றொரு உதவித்தொகை 50 ரூபாவாகவும் வழங்கப்பட வேண்டும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச நாளாந்த சம்பளத்தை நிர்ணயித்து தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக 21 தோட்ட நிறுவனங்கள் மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.