முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்! ஆளுநர் வழங்கியுள்ள உறுதிமொழி

வடக்கு மாகாணத்தில் உள்ள
பாடசாலைகளில் சிங்கள் மொழி மூல கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும்
ஆசிரியர்கள், வடக்கின் ஆளுநரும் தமக்கான தீர்வை வழங்க பின்னடிக்கின்றார் என
குற்றம் சாட்டிய நிலையில் குறித்த பிரச்சினைக்கு ஜனவரி மாதத்துக்குள் தீர்வு
தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்.

கொழும்பு, ஹம்பகா, காலி, களுத்துறை என பல வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார்
40 இற்கும் அதிகமான வடக்கு மாகாணாத்தில் உள்ள பாடசாலைகளில் சிங்கள் மொழி மூல
கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் தமது இடமாற்றம் தொடர்பில்
கரிசனை செலுத்துமாறு வடக்கின் ஆழுநரிடம் இன்றையதினம் (8) கோரிக்கை
விடுத்திருந்தனர்.

இதன்போது, தொழில் மற்றும் தமது வாழ்க்கை நிலைகுறித்து மொனிக்கா பிரயங்கனி
வீரக்கோன் என்ற ஆசிரியர் கருத்து கூறுகையில், 8 ஆண்டுகள் நியமனத்தின் பின் இடமாற்றன் என்ற ஒப்பந்தத்தின் பிரகாரமே நாம்
வடக்கின் குறிப்பாக வவுனியா முல்லைத்தீவு போன்ற மாவடங்களில் உள்ள சிங்கள மொழி
மூல படசலைகளுக்கு நியமனம் பெற்று சென்றிருந்தோம்.

இடமாற்றம்

ஆனால் இன்று 12 வருடங்களுக்கும் மேலாக சேவைக்காலம் முடிந்துவிட்டது. நாம் எமது
இடமாற்றம் குறித்து கோரிக்கைகளை சமர்ப்பித்து அது கிடைத்தும் குறிப்பாக
அதிபர் எம்மை விடுவித்தும் வலயக் கல்வி அதிகாரிகள் தடுத்து வருகின்றனர்.

இதனால் நாம் பல்வேறு இடர்பாடுகளை நாளாந்தம் எதிர்கொள்ள நேரிடுகின்றது.
இதே நேரம் தமிழ் மக்கள் வாழ்வியல் போன்று எமது வாழ்வியல் இல்லை. இதனால்
குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகிவருகின்றது.

போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்! ஆளுநர் வழங்கியுள்ள உறுதிமொழி | Teachers Who Joined Protest Governor Confirms

இவ்வாறு இடமாற்றம் கிடையாத விரக்தி ஒருபுறம் இருக்க குடும்பத்தில் பிரச்சினை
மறுபுறம் உருவானதால் ஹம்பகா மடுகங்கந்த தேசிய பாடசாலை ஆசிரியர் தற்கொலை
செய்திருந்தார்.

இதேபோன்று பல ஆசிரியர்கள் கணவர்களால் விவாகரத்துக் கோரும் நிலைக்குள் சென்று
நீதிமன்றுடன், வாழ்வை மீட்க நாளாந்தம் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

எமது
வாழ்வியல் நிலையை அதிகாரிகள் உணருவதாக இல்லை.

இன்று காலை ஆளுனரை சந்திக்க வந்த அனைவரும் வடக்கின் பல படசாலைகளில் 12
வருடங்களுக்கு மேலாக சேவையில் ஈடுபட்டு வருகின்றவர்கள்.

தீர்வு

வடக்கு கிழக்கின் ஆசிரியர் இடமாற்ற கோவையின் பிரகாரம் தாம் சேவையை குறித்த
மாவட்டங்களில் நிறைவு செய்தும் இதுவரை இடமாற்றங்கள் அவர்களுக்கு
கிடைக்கப்பெறபில்லை.

கடந்த அரசின் அதிகாரிகளிடம் தமது நிலைமைகளை எடுத்துக் கூறியும் தீர்வுகள்
எதுவும் வழங்கப்படாத விரக்தியுடன் இன்று ஆளுனரிடம் வந்துள்ளோம். அவரும் எம்மை
முழுமையாக சந்திக்காது மூவரை அழைத்து பேச்சு நடத்துகின்றார்.

போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்! ஆளுநர் வழங்கியுள்ள உறுதிமொழி | Teachers Who Joined Protest Governor Confirms

எனவே எமக்கான
தீர்வு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வரை நாம் எம்மாலான முயற்சிகளை
செய்யவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர் வெற்றிடங்களுக்கு
ஏற்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஜனவரி மாதத்துக்குள் தீர்வை வழங்குவதாக
தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே குறித்த ஆசிரியர்கள் வடக்கின் கல்வி அமைச்சின் செயலாளர் அலுவலகம்
சென்று அங்கும் தமது பிரச்சினைகளை கூறி கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.