முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை பணியாளரால் பெண் வன்கொடுமை

யாழ்ப்பாணம் (Jaffna) – தெல்லிப்பளை (Tellippalai) ஆதார வைத்தியசாலையின் மனநோயாளர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரை தவறான முறைக்குட்படுத்திய குற்றச்சாட்டில், வைத்தியசாலையின் துப்புரவு பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (11.03.2025) தெல்லிப்பளை காவல்துறையினரால் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி பகுதியைச் 35 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 02ஆம் திகதி சிகிச்சைக்கா தெல்லிப்பளை  ஆதார வைத்தியசாலையின் மனநோயாளர் சிகிச்சைப் பிரிவில் சேர்ப்பிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் தவறான உறவு

இந்நிலையில் கடந்த 07ஆம் திகதி வைத்தியசாலை 6ஆம் விடுதிக்கு பின்புறமாக வைத்து, அந்த வைத்தியசாலையில் பணிபுரியும் துப்பரவு பணியாளரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

யாழ். தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை பணியாளரால் பெண் வன்கொடுமை | Tellippalai Base Hospital A Worker Was Arrested

குறித்த பெண்ணை  காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாகவும் சந்தேகநபர் கூறியதாகவும், இதையடுத்து அவர்களுக்குள் வைத்தியசாலை வளாகத்துக்குள்ளேயே தவறான உறவு ஏற்பட்டதாகவும் யுவதியின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சந்தேக நபர் தனக்கு திருமணம் நிகழ்ந்து, குழந்தைகள் உள்ளதையும் அவர் பெண்ணிடம் மறைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், வைத்தியசாலையின் ஏனைய சிலருடன் பேசிய பாதிக்கப்பட்ட பெண், அந்த நபரை காதலிக்கலாமா என வினவிய போது  அந்த நபருக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கும் விடயம் தெரியவந்துள்ளது. பின்னர், பாதிக்கப்பட்ட பெண் இந்த விவகாரத்தை விடுதிக்கு பொறுப்பான வைத்தியரிடம் முறையிட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

இதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியினால் பரிசோதிக்கப்பட்டு, அறிக்கையிட்டதை தொடர்ந்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை பணியாளரால் பெண் வன்கொடுமை | Tellippalai Base Hospital A Worker Was Arrested

மனநோயாளர் சிகிச்சைப் பிரிவில் உள்ள பெண்கள் விடுதியை, ஆண் துப்புரவு பணியாளர் ஒருவர் சுலபமாக அணுகும் விதத்தில் இருந்தமை பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்மை குறிப்பிடத்தக்கது.

மேலும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

you may like this…!

https://www.youtube.com/embed/NFTrHdbTesA

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.