பொலன்னறுவை, மன்னம்பிட்டிய பிரதேசத்தில் மகாவலி கங்கையின் மேலாக தற்காலிக பாலம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மன்னம்பிட்டிய பிரதேசத்தில் மகாவலி கங்கையின் மேலாக நிர்மாணிக்கப்பட்டிருந்த பாலம் சேதமுற்றிருந்தது.
இந்நிலையில், அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபன பொறியியலாளர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியியலாளர்கள் ஒன்றிணைந்து இரண்டு நாட்களுக்குள்ளாக மகாவலி ஆற்றின் மேலாக தற்காலிக பாலம் ஒன்றை நிர்மாணித்துள்ளனர்.
சீராகியுள்ள போக்குவரத்து
இதனையடுத்து, கடந்த சில நாட்களாக முடங்கிக் கிடந்த பொலன்னறுவை – மட்டக்களப்பு போக்குவரத்து இன்று மாலை தொடக்கம் ஓரளவுக்கு சீராகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.