துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு, தற்காலிக பாதுகாப்பு இல்லங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (20) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது.
இந்த சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு இல்லங்கள்
இதற்கமைய, 10 மாவட்டங்களில் இந்த பாதுகாப்பு இல்லங்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த இல்லங்களின் செலவுகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நுவரெலியா மாவட்டத்தில் புதிய பாதுகாப்பு இல்லமொன்று நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.