முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கொழுந்து புலவு என்ற கிராமத்தில் சுமார் 15
ஏக்கரில் தெங்கு செய்கை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அறிமுக நிகழ்வு
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 18 ஆம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு முல்லைத்தீவு
மாவட்டத்தில் தெங்கு செய்கையினை ஊக்கிவிக்கும் நோக்கில் கொழுந்து புலவு பகுதியில் அமைந்துள்ள
சிவில் பாதுகாப்பு பண்ணையில் 15 ஏக்கருக்கு தெங்கு கன்றுகள் நாட்டிவைக்கும் நிகழ்வு
நேற்று(13.09.2024) நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி, தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவையாளர் உள்ளிட்டவர்கள் பலர்
கலந்து கொண்டு தென்னங்கன்றுகளை நாட்டிவைத்துள்ளனர்.