சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ கட்டுமானத்திற்கு எதிரான போராட்டமானது இன்றையதினம் (13) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த கட்டுமானமானது மக்களது காணியை அபகரித்து கட்டியுள்ள நிலையில் காணி
உரிமையாளர்களாலும், பொது மக்களாலும், அரசியல் பிரதிநிதிகளாலும் ஒவ்வொரு பௌர்ணமி
தினத்திலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை வழமை.
அந்தவகையில்
இன்றைய தினமும் இந்த போராட்டமானது நடைபெற்று வருகிறது.
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்,
அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், பசுமை இயக்கத்தின் தலைவர்
பொன்.ஐங்கரநேசன், காணியின் உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து
கொண்டுள்ளனர்.
மேலதிக தகவல் – கஜிந்தன்