முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மலையக தமிழர்களை நகர்த்தும் நிலை நிலவுக்கு பயந்து பரதேசம் போகும் நிலையா!

இலங்கையில் டித்வா சூறாவளிக்குப் பின்னர் அந்த தீவில் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வாழும் மக்கள் தொடர்பில் முன்னொருபோதும் இல்லாத வகையில் ஒரு பேசுபொருள் எழுந்துள்ளது.

குறிப்பாக மலையகத்தில் மண்சரிவு அபாயமுள்ள இடங்களில் உயிராபத்து நிலைமையுடன் போராடும் தமிழ் மக்களுக்கும் நிலையான தீர்வுகளை வழங்குவது குறித்தும் அந்த மக்களை வடக்கு கிழக்குக்கு நகர்த்த விரும்புவது குறித்தும் மனோகணேசன் போன்ற அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்துள்ளனர்.

மலையகத்தில் மட்டுமல்ல சிறிலங்கா தலைநகர் அமைந்துள்ள கொழும்பு மாவட்டத்தில் கூட அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான திட்டங்கள் ஏற்கனவே அலசப்படுவதாக சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவும் இந்தவாரம் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆகமொத்தம் இயற்கைச்சீற்றங்களால் அதிக ஆபத்துக்களை எதிர்நோக்கும் பகுதிகளில் வாழும் மக்களுக்குரிய மாற்றுத் தீர்வுகளை வழங்குவதற்குரிய ஒரு பேசுபொருள் எதிர்கட்சி முகங்களாலும் ஹரிணி போன்ற அரசின் முக்கிய தலைகளாலும் முன்வைக்கப்படுகிறது.

மலையக பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தளவில் மண்சரிவுகள் ஏற்படாமல் அங்கிருந்த மலைக்காடுகள் அதற்கு அரணாக இருந்தன. ஆனால் 2000 க்குபின்னர் குறிப்பாக ராஜபக்சக்களின் ஆட்சிக்காலத்தில் அங்கு முறைகேடான அரசியல் அதிகாரம் வழங்கிய அங்கீகாரத்துடன் நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி மற்றும் மாத்தளை ஆகிய இடங்களில் ஏராளமான மலைக்காட்டுமரங்கள் வெட்டப்பட்டு போதாக்குறைக்கு மலைகளும் குடையப்படடு ஆடம்பர விடுதிகள்.

விருந்தினர் மாளிகைகள் எல்லாம் எடுப்பட்டதால் கடும் மழை இப்போது மலைப்பகுதிகளையும் சரியவைக்கிறது.

இந்த அவலம் மலையத்தமிழர்களையும் அச்சுறுத்தி அவர்களை வடக்கு கிழக்குக்கு நகர்த்தலாமென என நிலவுக்கு பயந்து பரதேசம் போவதற்கு ஒப்பான நிலையை பேச வைக்கும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு… 

https://www.youtube.com/embed/2IXNm0vdDI4

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.