முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் பரவும் வதந்தி: திட்டவட்டமாக மறுத்த அதானி குழுமம்!

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒப்பந்தத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக பரவி வரும் வதந்திகளை இந்தியாவின் அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பில் அதானி கிரீன் எனர்ஜி எஸ்எல் லிமிடெட் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்போது, ஒரு கிலோவாட்-மணி நேரத்திற்கு 7 சதங்களாக விலையை மாற்றியமைக்க நிறுவனம் முன்வந்துள்ளதாகக் கூறும் கூற்றுகள் முற்றிலும் தவறானவை என நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு, சம்பந்தப்பட்ட இலங்கை அதிகாரிகளுடன் நிறுவப்பட்ட ஒப்பந்தத்தின் அசல் விதிமுறைகளுக்கு தாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளதாகவும், நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் திட்ட அளவுருக்கள் மாறவில்லை என்றும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

அபிவிருத்தி வாய்ப்பு

இதேவேளை, முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டத்திலிருந்து மரியாதையுடன் விலகியுள்ளதாகவும், இலங்கை அரசாங்கம் மறுபரிசீலனை செய்தால் எந்தவொரு அபிவிருத்தி வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ள எப்போதும் தயாராக இருப்பதாக அதானி குழுமம் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் பரவும் வதந்தி: திட்டவட்டமாக மறுத்த அதானி குழுமம்! | The 7 Cent Story Is A Lie Adani Group Says

இவ்வாறானதொரு பின்னணியில், பெப்ரவரியில், இலங்கை அதிகாரிகள் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க முயற்சித்த பிறகு, இலங்கையில் 442 மில்லியன் டொலர் காற்றாலை மின் திட்டத்தில் இருந்து விலகுவதாக அதானி குழுமம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.    

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்