கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டம் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தென் கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சந்திம சில்வாவின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சுத்தப்படுத்தும் திட்டம்
இந்த திட்டம் நேற்று(26.08.2024)காலி மஹமோதர முதல் தடெல்ல மற்றும் ஹம்பாந்தோட்டை நகர எல்லையுடன் இணைந்த கடற்கரையை மையமாக கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது கடற்கரைகளில் சிதறிக் கிடந்த பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.