இலங்கை லொத்தர் வரலாற்றின் மிகப்பெரிய பணப்பரிசை ஒருவர் வென்றுள்ளார்.
இது தேசிய லொத்தர் சபையின் மெகா பவர் 2210வது சீட்டிழுப்பாகும், அதில் ரூ.474,599,422 (47 கோடி) சூப்பர் பரிசு வெல்லப்பட்டுள்ளது.
வெற்றி பெற்ற லொத்தர் சீட்டை கொகரெல்ல பகுதியை சேர்ந்த விற்பனை முகவரான எச்.ஏ. ஜானகி ஹேமமாலா விற்பனை செய்துள்ளார்.
வென்றவரின் விபரங்கள்
இந்த நிலையில், லொத்தர் சீட்டிழுப்பில் வென்றவரின் விபரங்கள் வெளியிடப்படவில்லை, அவர் தொடர்பான தகவல்கள் நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, முன்னதாக லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய பரிசாக மெகா பவர் ரூ.230 மில்லியன் சூப்பர் பரிசு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

