டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மீண்டும் அமெரிக்க (America) ஜனாதிபதியாவதால் உலக பொருளாதாரத்திற்கு பாதகம் ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த விடயம் ஸ்விஸ் பொருளாதாரக் கொள்கை நிறுவனம் (Swiss Economic Policy Institute) நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இந்த கணக்கெடுப்பு 125 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1,400 நிபுணர்களிடம் நடத்தப்பட்டுள்ளது.
வர்த்தகத்தில் தடை
இந்தநிலையில் மேற்கத்திய நாடுகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா (Europe) ஆகியவற்றின் சர்வதேச வர்த்தகத்தில் தடை ஏற்படும் என 80% நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால், ஆசியா (Asia), ஆப்பிரிக்கா (Africa), லத்தீன் மற்றும் அமெரிக்கா (United States) போன்ற பகுதிகளில் பொருளாதார வளர்ச்சிக்கு டிரம்ப் ஒத்துழைப்பார் என நம்பப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, உக்ரைனில் (Ukraine) பெரும்பாலானவர்களுக்கு டிரம்பின் ஆட்சியில் நன்மைகள் ஏற்படும் எனவும் ஆனால் ஜேர்மனியில் (Germany) பொருளாதாரம் பாதிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் டிரம்ப் காலநிலை மாற்றக் கொள்கையில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்துவார் என 78 வீதமான நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விரும்பிய பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளமையினால் ஜேர்மனியின் (Germany) பொருளாதாரத்துக்கு நேரடி தாக்கம் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அதிர்ச்சித் தகவல்கள் உலக பொருளாதார நிபுணர்களிடையே பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.