நேற்று நடைபெற்ற மே தினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்காக அரசியல் கட்சிகள் கிட்டத்தட்ட இருநூறு கோடி ரூபாய் செலவழித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
பணவீக்கச் சூழல் காரணமாக, வரலாற்றில் அதிகப்படியான பணத்தைச் செலவழித்து மே தின பேரணிகளை ஏற்பாடு செய்ய நேர்ந்ததாக அரசியல் கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.
போக்குவரத்து செலவுகளுக்காக அதிக பணத்தை
மே தின பேரணிக்கு மக்களை அழைத்து வருவதற்கு போக்குவரத்து செலவுகளுக்காக அரசியல் கட்சிகள் இம்முறை அதிக பணத்தை செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மீதிப் பணம் மேடை அமைப்பது, ஒலிபெருக்கி, விளக்குகள் அமைத்தல், கூட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை அலங்கரித்தல், கட்சிக்காரர்களுக்கு உணவு, பானங்கள் வழங்குதல் போன்றவற்றுக்குச் செலவிடப்பட்டுள்ளது.
இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : மீண்டும் ஆரம்பமான சேவை
மே தின பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்ததற்காக பல அரசியல் கட்சிகள் நிதிகளை பொறுப்பேற்றதாக கூறிய கட்சித் தலைவர்கள், தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் பல்வேறு பரோபகாரர்களும் மே தின பேரணிகளை ஏற்பாடு செய்ய உதவியதாக குறிப்பிட்டனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, இந்த ஆண்டு தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கொண்டாட்டத்திற்காக அதிகளவான பணம் செலவிட வேண்டியிருந்தது.
தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டங்கள் நான்கு மாவட்டங்களில் நடைபெற்றதால் செலவு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காதலியின் வீட்டிற்கு சென்று காணாமால்போன இளைஞன் : இவர்களை தெரியுமா..!
மேடை, ஒலிபெருக்கிகள், விளக்கு அமைப்புகள் மற்றும் ஒருசில சிறு விளம்பரச் செயற்பாடுகளுக்கான செலவுகளை மாத்திரமே கட்சித் தலைமையகம் ஏற்கும் எனவும் ஏனைய அனைத்துச் செலவுகளையும் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டாக ஏற்பர் எனவும் அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |