நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக முட்டை மீதான வற் வரியை அரசாங்கம் நடைமுறையாக்கியமையால் பெருமளவில் உள்ளூர் முட்டைகளின் விலை அதிகரிக்குமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரட்ணசிறி அழககோன் (Alahakoon Rathnasiri) தெரிவித்துள்ளார்.
5000 கால்நடைகளை வளர்க்கும் கோழிப்பண்ணையாளர்களுக்கு இந்த வற் வரி நடைமுறைப்படவுள்ளதாகவும், அவ்வாறான கோழிப்பண்ணைகளை நடத்தும் விவசாயிகள் தொழிலை விட்டு நிரந்தரமாக வெளியேறும் அபாயம் இருப்பதாகவும் சங்கத்தின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, முட்டைக்கு வற் வரி நடைமுறைப்படுத்தப்படுவது இந்த நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
பெறுமதி சேர் வரி
உள்ளுர் முட்டைகளுக்கு வற் நடைமுறைப்படுத்தப்பட்ட போதும் அரசாங்கம் தொழில் வளர்ச்சிக்கு நிவாரணம் வழங்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் முட்டைகளுக்கு 15 வீதமான பெறுமதி சேர் வரி (VAT) அறவிடப்படும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.