நீண்ட காலங்களுக்கு பிறகு நாட்டில் பலயா மீனின் கொள்முதல் விலை குறைந்துள்ளதாக சிலாபம் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொள்முதல் விலை
இதன்படி, ஒரு கிலோ பலயா மீனின் கொள்முதல் விலை 250 ரூபாவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஒரு கிலோ கெலவல்லா மீனின் விலையும் 500 ரூபாவாகக் குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இருப்பினும், மீனின் விலை குறைக்கப்பட்டதால், கடற்றொழிலாளர்கள் செலவழித்த பணம் கூட தங்களுக்கு கிடைக்காது என்று கவலை தெரிவித்துள்ளனர்.