யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில் இரு தனியார் பேருந்துகளின் ஓட்டப்போட்டியால்
வீதியில் சென்ற மொதுமக்கள் பயத்துடன் பயணித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று (23) காலை 10.15 மணியளவில் மானிப்பாய் பகுதியில்
இடம்பெற்றது.
கீரிமலையிலிருந்து யாழ். நகர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும்,
காரைநகரிலிருந்து யாழ்.நகர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்துமே இவ்வாறு போட்டியிட்டு வேகமாக பயணித்துள்ளன.
மானிப்பாய் கட்டுடைப் பகுதி
மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் ஆரம்பித்த போட்டி ஆறுகால் மடம்வரை தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் கீரிமலை – யாழ்ப்பாணம் தனியார் பேருந்து சாரதி சமிக்கை விளக்கினை
உரியமுறையில் ஒளிரவிட்டு பேருந்துனை செலுத்தியபோதும் காரைநகர் – யாழ் பேருந்து
சாரதி சமிக்கை விளக்கினை உரியமுறையில் ஒளிரவிடாது தாறுமாறாக பேருந்துனை
செலுத்தியதனை அவதானிக்கமுடிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால் பலரை தனியார் பேருந்துகள்
ஏற்றாது சென்றதாகவும் கூறப்படுகிறது.

