முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுரகுமார தவறிவிட்ட விடயங்கள்: சபா.குகதாஸ் சுட்டிக்காட்டு

ஆட்சிக்கு வரும் முன்பாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்து பல விடயங்களை மிக
ஆணித்தரமாக பேசிய ஜனாதிபதி அநுரகுமார திஸானாயக்க தனது முதல் உரையில் அதனை பிரதிபலிக்க
தவறிவிட்டார் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ்
சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு நேற்றுமுன்தினம்
இடம்பெற்ற நிலையில், ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் எதிர்கால நோக்கு தொடர்பிலான
விளக்கமான பகுப்பாய்வு  உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்
போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சி வரிசை

“ஆட்சிக்கு வரும் முன்பாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்து பல விடையங்களை மிக
ஆணித்தரமாக பேசிய அநுரகுமார தனது அக்கிராசன உரையில் அதனை பிரதிபலிக்க
தவறிவிட்டார்.

அநுரகுமார தவறிவிட்ட விடயங்கள்: சபா.குகதாஸ் சுட்டிக்காட்டு | Things Anura Kumara Missed

இனவாதம் பற்றி பேசுகின்ற ஜனாதிபதி அநுர அதனை தென்னிலங்கை சக்திகள் தான் கடந்த
காலத்தில் அரசியல் முதலீடாக பயன்படுத்தினார்கள் என்பதை வெளிப்படையாக
குறிப்பிடவில்லை.

மாறாக தமிழர்கள் தான் இனவாதம் மற்றும் பிரிவினை வாதத்தை
கையில் எடுத்தவர்கள் போன்று மறைமுகமாக குறிப்பிட முனைதல் ஆரோக்கியமான அரசியல்
பயணத்தை உறுதி செய்ய மாட்டாது.

தமிழர்கள் தங்களது மறுக்கப்பட்ட உரிமையை கோரி போராடியவர்களே தவிர சிங்கள
மக்களின் எந்த உரிமையையும் தட்டிப் பறிக்க ஒரு போதும் முயற்ச்சிக்கவில்லை.

சமஷ்டி அடிப்படையிலான அரசியல்

இன்றும் கூட ஐக்கிய – பிளவுபடாத இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல்
தீர்வை கோரி நிற்கின்றனர்.

அநுரகுமார தவறிவிட்ட விடயங்கள்: சபா.குகதாஸ் சுட்டிக்காட்டு | Things Anura Kumara Missed

இதனை இனவாதமாகவும் பிரிவினைவாதமாகவும் சித்தரித்து அரசியல்
குளிர்காய்ந்தவர்கள் தென்னிலங்கை அரசியல் மற்றும் பௌத்த பீடங்களின் இனவாதிகள்
இதனை யாரும் மறுக்க முடியாது. காரணம் அதற்கான வரலாற்றுப் பதிவுகள் போதுமாக
உள்ளன.

சிங்கள பெரும்பாண்மை மக்கள் இலங்கைத்தீவில் புரையோடிப் போய் உள்ள தேசிய
இனப்பிரச்சினைக்கு தீர்வைக் கண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஒவ்வொரு
தேர்தல்களிலும் புதியவர்களை மாற்றி பழையவர்களை நிராகரித்துள்ளனர்.

காரணம்
மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறியமையே ஆகும்.

இதை புரிந்து கொண்டு இனவாதத்திற்கு இடமில்லை என்ற உரையாடலை விட்டு உண்மையாக
இனவாதம் மற்றும் மதவாதம், பிரிவினைவாதம் என்பவற்றை களைய புதிய அரசியல்
யாப்பின் மூலம் உறுதியான அரசியல் தீர்வை சமஸ்டி அடிப்படையில் முன்வைத்து செயல்
வடிவத்துடன் களத்தில் இறங்குங்கள்’’ என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.