முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சோமரத்னவின் உயிருக்கு அச்சுறுத்தல் : பாதுகாப்பு கோரும் சகோதரி

செம்மணி தொடர்பான சர்வதேச விசாரணையில் சாட்சியளிப்பதற்கு தயார் என சோமரத்ன ராஜபக்ச அறிவித்திருப்பதால் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால், அவருக்குரிய பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சோமரத்னவின் சகோதரி ரோஹினி ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

யாழ். செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அத்துடன் யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் நடாத்தப்பட்டுவந்த சித்திரவதைக்கூடங்கள் என்பன பற்றிய விபரங்களை வெளியிடுவதற்குத் தனது கணவர் தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலை

தற்போது குறித்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கும் தனது சகோதரரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனவும், அவரது பாதுகாப்பைப் பலப்படுத்துவற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள அவரது சகோதரி ரோஹினி ராஜபக்ச, இதுகுறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சோமரத்னவின் உயிருக்கு அச்சுறுத்தல் : பாதுகாப்பு கோரும் சகோதரி | Threat Krishanthi Murder Case Criminal Somarathne

அதுமாத்திரமன்றி மரணதண்டனை விதிக்கப்பட்டு 29 வருடகாலமாக சிறைவாசம் அனுபவித்துவரும் தனது சகோதரர் சோமரத்ன ராஜபக்சவுக்கு கடந்த காலங்களில் சிறைக்கு உள்ளிருந்தும், வெளியே இருந்தும் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும், அத்தோடு சில சந்தர்ப்பங்களில் அவரது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது சோமரத்ன ராஜபக்சவின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அவரது சகோதரி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.