முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் இடம்பெற்ற, துப்பாக்கிச் சூட்டில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விடுதி ஒன்றின் உரிமையாளர் உட்பட மூவர் இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இருவர் 29 மற்றும் 54 வயதுடையவர்கள் என்பதுடன், மற்றையவரின் வயது உறுதிப்படுத்தப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

மூவர் பலி

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மேற்படி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் | Three Killed In Firing In Galle

இதேவேளை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த மூவரும் மதுபானம் அருந்திக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது​.

சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை ஹினிதும பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினமும் காலி, கொஸ்கொட, மஹா இந்துருவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

இந்த சம்பவத்தில் துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி செயல்படாததால் உயிர் சேதமோ அல்லது பொருட்கள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என கூறியுள்ளனர்.

தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் | Three Killed In Firing In Galle

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் வீட்டின் முன் ஒரு நபரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.     

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்