காலி மாவட்டத்தில் இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது மூன்றரை இலட்சம் பேரளவில் வாக்களிப்பதில் இருந்தும் தவிர்த்து கொண்டுள்ளனர்.
காலி மாவட்டத்தில் இம்முறை பொதுத் தேர்தலில் 903, 163 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 576, 937 பேர் பொதுத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 64 வீதமாகும். அந்த வகையில் இம்முறை காலி மாவட்டத்தில் 326, 226 பேர் வாக்களிப்பதில் இருந்தும் தவிர்ந்து கொண்டுள்ளனர்.
வாக்களிப்பு வீதம் குறைவு
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக 903, 163 வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 725, 361 பேர் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்திருந்தனர். அது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 80 வீதமாகும்.
அந்த வகையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களித்தவர்களில் 16 வீதமானவர்கள், சுமார் ஒன்றரை இலட்சம் பேர் இம்முறை பொதுத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.