புத்தளம்(puttalam) பழைய மன்னார் வீதியின் 2ஆம் கட்டை பகுதியில் மின்சாரம் தாக்கியதில் கட்டுமான தொழிலாளர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை(29) இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தொழில் செய்யும் இரும்புக்கேடரை நான்கு கட்டுமான தொழிலாளர்கள் தூக்கி சென்றபோது மின்சாரம் தாக்கியது. அவர்களில் ஒருவர் தூக்கி விசப்பட்ட நிலையில், உயிர் பிழைத்துள்ளார்.எனினும் ஏனைய மூவரும் உயிரிழந்தனர்.
புத்தளம் வைத்தியசாலையில் சடலங்கள்
2ஆம் கட்டை பிரதேசத்தை சேர்ந்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.