கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிள் உட்பட நால்வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் வழங்கியதற்காக மத்துகம, வெலிபன்ன பிரதேசத்தைச் சேர்ந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர், அவரது மனைவியின் தாயார், மத்துகம ஷான் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் சீடன் மற்றும் மற்றுமொரு பெண் ஆகியோர் அண்மையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை கான்ஸ்டபிளின் மனைவியின் தாயார்
காவல்துறை கான்ஸ்டபிளின் மனைவியின் தாயார் நேற்று (19) நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பெண் உட்பட மூன்று சந்தேக நபர்களும் இன்று (20) கொழும்பு மேலதிக நீதவான் நுவன் கௌசல்ய முன் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.