முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரஷ்யப்படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ளவர்களை மீட்டுத்தர கோரி அநுர தரப்பிற்கு தாய்மார்கள் கடிதம்

ரஷ்யப் படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள எமது உறவுகளை பாதுகாப்பாக எம்மிடத்தில் மீட்டுத் தருவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anurakumara Dissanayake) மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு(Vijitha Herath) அவர்களின் தாய்மார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஜனாதிபதி செயலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது உறவுகள் முகவர்கள் ஊடாக ஐரோப்பாவுக்குச் செல்வதற்காக பயணமாகியபோது இறுதித் தருணத்தில் ரஷ்யாவின் ஊடாக பயணத்தினை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டனர்.

ரஷ்ய படை

அதற்கமைவாக, அவர்கள் ரஷ்யாவுக்குச்(Russia) சென்றபோது அங்கு இலங்கை இராணுவத்தில் கடமையாற்றிய அதிகாரியொருவர் அவர்களை சில நாட்களுக்கு பராமரித்ததோடு பின்னர் ரஷ்யப் படையில் பயிற்சிகளைப் பெறுவதற்கான இணைப்புச் செய்துள்ளார்.

ரஷ்யப்படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ளவர்களை மீட்டுத்தர கோரி அநுர தரப்பிற்கு தாய்மார்கள் கடிதம் | Three Young Tamil Men Forced Into Russian Army

அப்போதும் கூட அவர் அடையாள அட்டையைப் பெறுவதற்காகவே அவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.

எனினும், பயிற்சியின் பின்னர் எமது உறவுகள் போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களை மீட்டுத்தருமாறு ஏற்கனவே டிசம்பர் 2ஆம் திகதி நாம் எழுத்துமூலமான கோரிக்கையை விடுத்துள்ளபோதும் இதுவரையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுத்ததாக நாம் அறியவில்லை. எமக்கும் வெளிவிவகார அமைச்சு எவ்விதமான பதில்களையும் வழங்கவில்லை.

உயிருக்கு ஆபத்து

இந்நிலையில், எமது உறவுகளுடன் காணப்பட்ட தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஒருமாதமாக எமக்கு எந்தவிதமான பதில்களும் அளிக்கப்படாதுள்ள நிலையில், எமது உறவுகளை மீட்டுத் தருவதற்காக உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ரஷ்யப்படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ளவர்களை மீட்டுத்தர கோரி அநுர தரப்பிற்கு தாய்மார்கள் கடிதம் | Three Young Tamil Men Forced Into Russian Army

விசேடமாக, எமது அன்புக்குரியவர்கள் தொடர்புகள் துண்டிக்கப்படுவதற்கு முன்னதாக அவர்கள் உயிருக்கு ஆபத்தான போர்க்களத்தில் இருப்பதாக வெளிப்படுத்தியிருந்தார்கள்.

அவர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தது.

ஆகவே, அவர்களை பாதுகாப்பாக மீட்டெடுத்து எம்மிடத்தில் ஒப்படைக்குமாறு நாம் கோரிக்கை விடுப்பதோடு கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறு ஆட்கடத்தில் வலையமைப்புக்களையும் முழுமையாக அகற்றுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

எமது நீதியையும், நியாயத்தையும் பெற்றுத்தருவீர்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு காணப்படுவதோடு விரைந்து இந்த விடயத்தில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் இதனால் நாம் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பாதிப்படைந்து வருகின்றோம் என்பதையும் குறிப்பிடுகின்றோம் என்றுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.