Courtesy: uky(ஊகி)
முல்லைத்தீவு – துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றின் பதிலதிபராக கடமையாற்றி வந்த ஆசிரியரின் நடத்தை கற்றல் புலத்தில் இருப்பவர்களுக்கு முன் மாதிரியாக இல்லை என விமர்சிக்கப்படுகின்றது.
குறித்த பாடசாலைக்காக உரிய அதிபரை நியமனம் செய்யும் வரை பதிலதிபராக கடமையாற்றுவதற்கென ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அண்மையில் நடந்து முடிந்திருந்த பாடசாலை அதிபர் பதவிக்கான பரீட்சைக்கு தோற்றி வெற்றியீட்டியோரில் ஒருவரை இந்தப் பாடசாலைக்கு அதிபராக வடமாகாண கல்வித் திணைக்களம் நியமனம் செய்திருந்தது.
பாடசாலைக்கு புதிய அதிபர் நியமிக்கப்பட்டு அவர் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள பாடசாலைக்கு வந்திருந்த போதும் பதிலதிபராக கடமையாற்றிக் கொண்டிருந்த ஆசிரியர் பொறுப்புக்களை ஒப்படைக்காது ஒரு மாத காலத்திற்கும் மேலாக இருந்து வந்தது மாணவர்களுக்கு முன் மாதிரியற்ற செயற்பாடு என கல்வி ஆர்வலர்களால் விமர்சிக்கப்பட்டது வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்தில் கூழாமுறிப்பு தமிழ் வித்தியாலயத்திலேயே இந்த முன் மாதிரியற்ற செயற்பாடு நடைபெற்றுள்ளது.
வீதி விபத்துக்களுக்கு காரணமாகும் காட்டு யானைகளின் செயற்பாடு: தடுக்க கோரும் நெடுந்தூரப் பயணிகள்
சிறப்பாக செயற்பட்ட பதிலதிபர்
கூழாமுறிப்பு தமிழ் வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்திருந்த பதிலதிபர் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சைக்கான வகுப்புக்களை செய்ய வல்லவர்.
கூழாமுறிப்பு பாடசாலையின் தரம் 5 மாணவர்களுக்கான வகுப்புக்களை பெரும் அக்கறையுடன் செய்து வந்துள்ளதோடு பரீட்சை முடிவுகளிலும் பாராட்டத்தக்க மாற்றங்களை அவர் ஏற்படுத்தியிருந்தார் என கூழாமுறிப்பில் சமூகச் செயற்பாடுகளில் ஆர்வத்தோடு ஈடுபட்டுவரும் அரச உத்தியோகத்தர் ஒருவர் இது தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.
தரம் 11 மாணவர்களுக்கான க.பொ.த (சா/த) பரீட்சைகளை இலகுவாக எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளாக கற்றலை இலகுபடுத்துவதற்கு வகுப்புக்களை முன்னெடுத்திருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
நடிகை தமிதா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
கூழாமுறிப்பு வயோதிபரின் பார்வையில்
பாடசாலையிலும் மாணவர்களிலும் அக்கறையோடு செயற்பட்டிருந்த போதும் புதிய அதிபருக்கு இடமளிக்காத போக்கு மாணவர்களுக்கு முன்மாதிரியற்றது என கூழாமுறிப்பின் வயோதிபர் ஒருவருடன் பாடசாலையின் இந்த நிலைபற்றிய கலந்துரையாடலின் போது அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதிபர் பதவிக்கான உள்ளீர்ப்பு பரீட்சைக்கு தோற்றி வெற்றி பெற்றிருந்தால் இவரும் அதிபராகியிருக்கலாம். இதே பாடசாலையை கேட்டு எடுத்திருக்கலாம். அவ்வாறு அவர் செய்து கொள்ளாது புதிதாக நியமனம் பெற்று வந்த அதிபருக்கு பொறுப்புக்களை விட்டுக்கொடுக்காதது கவலைக்குரிய விடயமாகும்.
புதிய அதிபர் வந்து கையொப்பம் இட்டு விட்டு சும்மா இருக்க இவரே தான் அதிபருக்குரிய எல்லா விடயங்களையும் செய்து வந்திருக்கின்றார் என அந்த வயோதிபர் மேலும் குறிப்பிட்டார்.
இஸ்ரேலுக்கான தொழிலாளர் ஏற்றுமதியை ரத்து செய்யுமாறு கோரிக்கை
மாணவர்களுக்கான முன்மாதிரி
பாடசாலை என்பது நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு கட்டமைப்பாகும்.இங்கே பதவி நிலைகளுக் கூடாக வேலைகள் பகிர்ந்தளித்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக பாடசாலையின் செயற்பாடுகளே அமையும்.
நிர்வாக ஒழுங்குகளை மதித்து நடந்து கொள்ளாத ஆசிரியர்களை கண்ணுற்று வளரும் மாணவர்கள் தாங்களும் பெரியவர்களாகி அலுவலகங்களில் கடமையாற்ற செல்லும் போது நிர்வாக ஒழுங்குகளை மதிக்காத மனிதர்களாக செயற்படுவார்கள்.
அந்த மனோபாவத்திற்கான அடிப்படையானது பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர், கல்வி சாரா ஊழியர்கள் என பாடசாலைக் கட்டமைப்போடு இணைந்து இயங்கும் எல்லா பதவி நிலையினரின் செயற்பாடுகளிலும் தங்கியிருக்கிறன. என சமூக விடய ஆய்வாளர் வரதன் குறிப்பிட்டார்.
கூழாமுறிப்பு பாடசாலையின் பதிலதிபரின் செயற்பாடானது கட்டளைக்கு கீழ்படியாமை மற்றும் தலைமையை மதிக்காமை போன்ற பண்பாடுகளை அடிப்படையாக கொண்டது.
பாடசாலைக் கல்வியிலும் பல்கலைக்கழகம் கல்வியிலும் வழங்கப்படும் கல்வியின் அடிப்படை நோக்கம் துறைசார் வேலையாட்களை உருவாக்குவதே! அவற்றிலிருந்து சிந்தனையாளர்கள் தாமே தோற்றம் பெறுவார்கள் என்ற அடிப்படையில் கட்டுப்பாடுகளை மதிக்காது தன்னிச்சையாக செயற்படும் துறைசார் ஊழியர்களின் உற்பத்தி பயனற்ற முயற்சியாகவே அமைந்து விடும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
விரைவில் பேச்சுவார்த்தை! நிதி அமைச்சு வெளியிட்டு தகவல்
இறுதியில் ஏற்பட்ட மாற்றம்
பாடசாலைக்கான அதிபர் நியமனம் வழங்கப்பட்டு ஒரு மாத காலம் கடந்த பின்னர் வலயக்கல்விப் பணிமனையினரின் தலையீட்டினால் பொறுப்புக்கள் புதிய அதிபரிடம் கையளிக்கப்பட்டதாக பாடசாலை சார்ந்த உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இது கடந்த வாரத்தில் நடந்து முடிந்த செயற்பாடாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றது.
இம்முறை க.பொ.த(சா/த) மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றும் வரை தான் பொறுப்புக்களை புதிய அதிபரிடம் கையளிக்க மாட்டேன் என பதிலதிபராக கடமையாற்றி வந்த ஆசிரியர் குறிப்பிட்டு வந்ததையும் எதிர்வரும் 06.05.2024 இல் க.பொ.த (சா/த) பரீட்சைகள் ஆரம்பமாவுள்ள நிலையில் பொறுப்புக்களை வழங்கியது என்பதும் ஒருசேர நோக்கும் போது பதிலதிபர் தனிச்சையாகவே இதுவரை செயற்பட்டிருக்கின்றாறோ என்ற எண்ணம் தனக்கிருப்பதாக சமூக ஆர்வலர் ஒருவர் இது தொடர்பில் விளக்கியிருக்கிறார்.
துணுக்காய் கல்வி வலயத்தில் பல பாடசாலைகளில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தன்னிச்சையாக செயற்பட்டுவருவது வழமையாகி விட்டது.அவர்களுக்கு பாடசாலைக் கட்டமைப்பின் விதிமுறைகள் பற்றி அக்கறை இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
முகநூல் விளம்பரத்தினை நம்பி வேலைக்கு சென்ற இளம்யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |