இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான திலகரத்ன டில்ஷான், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவின் நாட்டை கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் திலகரத்ன டில்ஷான் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி
ஏறக்குறைய 17 வருடங்கள் இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய திலகரத்ன டில்ஷான், சிறிது காலம் அணி தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

இதேவேளை, அண்மையில் இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹஷான் திலகரத்ன மற்றும் அவரது மனைவி அப்சரி திலகரத்ன ஆகியோரும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.

