முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரமாணப் பத்திர விண்ணப்பதாரர்கள் மற்றும் அனுசரணையாளர்களுக்கான உதவிக்குறிப்புகள்

குடும்ப அடிப்படையிலான சகல விசா விண்ணப்பங்களிலும் பிரமாணப் பத்திர உதவி அல்லது I-864 படிவம் ஒரு முக்கியமான குடியேற்ற ஆவணமாகும்.

இந்த படிவத்தின் நோக்கம் குடிப்பெயர்ந்தவர்கள், அமெரிக்க அரசாங்கத்திற்கு சுமையாக மாற மாட்டார்கள் என்பதை நிரூபிப்பதாகும். இந்தக் கட்டுரையில், பிரமாணப் பத்திரத்தை யார் பூர்த்தி செய்ய வேண்டும், அதை எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் தேவையான ஆவணங்களின் சரிபார்ப்புப் பட்டியலை வழங்குவோம்.

பிரமாணப் பத்திர உதவியை யார் சமர்ப்பிக்க வேண்டும்?

பெரும்பாலான குடும்ப அடிப்படையிலான புலம்பெயர்ந்தோர் மற்றும் சில வேலைவாய்ப்பு அடிப்படையிலான குடியேறிகள் பிரமாண பத்திர உதவியை சமர்ப்பிக்க வேண்டும்.

பிரமாணப் பத்திர விண்ணப்பதாரர்கள் மற்றும் அனுசரணையாளர்களுக்கான உதவிக்குறிப்புகள் | Tips For Affidavit Applicants And Sponsors

படிவம் I-864 ஐ சமர்ப்பிக்க வேண்டிய வகைகளின் பிரிவுகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

1. அமெரிக்க பிரஜைகளின் நேரடி உறவினர்கள்: அமெரிக்க குடிமக்களின் வாழ்க்கைத் துணைவர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள்

2. குடும்ப விருப்பத்தேர்வு வகைகள்: நிரந்தர குடியிருப்பாளர்களின் F2A (வாழ்க்கைத்துணைகள் மற்றும் வயதுவரா குழந்தைகள்) மற்றும் F2B (வயது வந்த திருமணமாகாத மகன்கள் மற்றும் மகள்கள்)

3. வேலைவாய்ப்பு அடிப்படையிலான குடியேறிகள்: சில சூழ்நிலைகளில், வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர், விண்ணப்பதாரருடன் தொடர்புடையவராக இருந்தால் அவருக்கு பிரமாண பத்திர உதவி தேவைப்படலாம்.

4. K-1 விசா வைத்திருப்பவர்கள்: K-1 விசாவில் நாட்டுக்குள் பிரவேசிப்பவர்கள், அமெரிக்கக் குடிமக்களின் வருங்கால வாழ்க்கைகத்துணைகள், அவர்களின் விவாக நிலை சரிசெய்தலின் போது பிரமாணப் பத்திர உதவியை சமர்ப்பிக்க வேண்டும்.

பிரமாணப் பத்திர உதவியை எவ்வாறு நிரப்புவது?

உங்கள் படிவம் I-864 துல்லியமாக பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்கான முக்கிய படிகள்:

பிரமாணப் பத்திர விண்ணப்பதாரர்கள் மற்றும் அனுசரணையாளர்களுக்கான உதவிக்குறிப்புகள் | Tips For Affidavit Applicants And Sponsors

1. தேவையான தகவல்களைச் சேகரிக்கவும்: முதலில், உங்கள் சமூகப் பாதுகாப்பு எண், வேலைவாய்ப்பு விபரங்கள், வருமானம் மற்றும் சொத்துக்கள் போன்ற சில தகவல்களைச் சேகரிக்க வேண்டும். இந்த ஆயத்த செயல்முறைகள் விசா விண்ணப்பிப்பினை மிகவும் எளிதாக்கும்.

2. படிவத்தை பூர்த்தி செய்யவும்: I-864 படிவத்தை USCIS இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். தேவையான அனைத்து தகவல்களும் அங்கு உள்ளீடு செய்யப்பட வேண்டும்.

3. வீட்டு உறுப்பினர்களைச் சேர்க்கவும்: குடும்பத்திலிருந்து வருமானம் பெறும் அல்லது குடும்ப வருமானத்தில் பங்களிக்கும் உங்கள் குடும்பத்தைச் சார்ந்துள்ள மற்றும் பிற குடியிருப்பாளர்கள் அனைவரையும் பட்டியலிடவும்.

4. போதுமான வருமானத்தைக் காட்டுங்கள்: நீங்கள் நிதியளிப்பாளராக மாறுவதற்கு முன், உங்கள் குடும்ப அளவின் அடிப்படையில் மத்திய அரசாங்கத்தின் வறுமை கோட்டு வழிகாட்டுதல்கள் தொகையை விடவும் (படிவம் I-864P) 125%க்குக் குறையாமல் சம்பாதிக்கிறீர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். நீங்கள் தற்பொழுது இராணுவம் அல்லது படைத்தரப்பில் கடமையாற்றுபவராக இருந்தால், உங்கள் வருமானம் 100% வறுமை கோட்டு வழிகாட்டுதல்களை மட்டுமே பூர்த்தி செய்தால் போதுமானது.

5. கையொப்பம்: படிவத்தில் கையொப்பமிட்டு திகதியிடவும்.

6. மதிப்பாய்வு மற்றும் இருமுறை சரிபார்த்தல்: சமர்ப்பிக்கும் முன் படிவத்தை மதிப்பாய்வு செய்து, விண்ணப்பத்தின் நகலை உங்கள் பதிவுகளுக்காக சேமித்து வைத்துக்கொள்ளவும்.

பிரமாணப் பத்திர உதவி சரிபார்ப்புப் பட்டியல்
உங்கள் பிரமாணப் பத்திர ஆதரவு ஆவணத்தில் சேர்க்க வேண்டிய ஆவணங்களின் சரிபார்ப்புப் பட்டியல் இங்கே:

1. பூர்த்தி செய்யப்பட்ட படிவம் I-864: அது கையொப்பமிடப்பட்டு திகதியிடப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.

2. வருமானச் சான்று: உங்கள் வருமானத்தை நிரூபிக்க அண்மைய வரி அறிக்கைகள் (பொதுவாக கடந்த மூன்று ஆண்டுகள்), W-2s அல்லது (pay stubs) பே ஸ்டப்களைச் சேர்க்கவும்.

3. அமெரிக்க குடியுரிமை அல்லது நிரந்தர வதிவிடச் சான்று: நீங்கள் அமெரிக்க பிரஜையாக இருந்தால், உங்கள் பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு அல்லது இயல்பாக்க சான்றிதழின் நகலைச் சேர்க்கவும். நீங்கள் நிரந்தர குடியிருப்பாளராக இருந்தால், உங்கள் கிறீன் கார்ட் நகலைச் சேர்க்கவும்.

4. வேலைவாய்ப்பு சரிபார்ப்பு: கிடைத்தால், உங்கள் வேலை நிலை மற்றும் சம்பளத்தை சரிபார்க்கும் கடிதத்தை உங்கள் தொழில்தருனரிடமிருந்து வழங்கவும்.

5. குடும்பத் தகவல்: வருமானத்தில் பங்களிக்கும் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் விவரங்களையும்> பொருந்தினால் அவர்களின் வருமானச் சான்றிதழுடன் சேர்க்கவும்.

6. சொத்துக்கள்: உங்கள் வருமானம் தேவையான அளவைப் பூர்த்தி செய்யவில்லை என்றால் புலம்பெயர்ந்தவருக்கு நீங்கள் நிதியுதவி செய்ய முடியும் என்பதை நிரூபிக்க வங்கி அறிக்கைகள் அல்லது சொத்துப் பத்திரங்கள் போன்ற உங்களின் சொத்துக்கள் பற்றிய தகவல்களை வழங்கலாம்.

7. படிவம் I-864A: குடும்ப உறுப்பினர்கள் யாராவது வருமானத்தில் பங்களித்தால் அவர்கள் படிவம் I-864A ஐ நிரப்ப வேண்டும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.