கொட்டகலையில் (Kotagala) மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹட்டன் (Hatton) –நுவரெலியா (Nuwara Eliya) பிரதான வீதியில்,
கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் குறித்த விபத்து சம்பவம் இன்று (14) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சிக்கி ஆசிரியர் ஒருவர்
உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
மூவர் காயம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொட்டகலையிலிருந்து ஹட்டன் நோக்கி தனது மகனுடன் மோட்டார்
சைக்கிளில் சென்ற ஓட்டுநர் ஒருவர், முன்னால் சென்ற முச்சக்கர வண்டியை முந்திச்
செல்ல முயன்றுள்ளார்.

இதன்போது, எதிர்திசையில் ஹட்டனில் இருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற
மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியுள்ளார்.
ஆதார வைத்தியசாலை
இதன்போது ஹட்டனில் இருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளில்
இருந்த இருவர்
உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மூவரும் ஆரம்பத்தில் கொட்டகலை பிராந்திய வைத்தியசாலையில்
சேர்க்கப்பட்டு பின்னர் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கடுமையாக சேதம்
விபத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கடுமையாக
சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு வாகனங்களின் அதிவேகமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்ப
விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக திம்புல பத்தனை காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

