ஒரு அமைச்சர் ஊடகமொன்றில் இசைப்பிரியா படுகொலை, கிருசாந்தி படுகொலை, பாலசந்திரன் படுகொலை சம்பந்தமாக நீதியான விசாரணையை முன்னெடுப்போம் என கூறியிருந்தார்.
ஆனால் எங்களுடைய தமிழ் மண் இந்த வார்த்தைகளை நம்பாது இதுவொரு அரசியல் வார்த்தைகள் ஆகும் என நாடாளுமன்ற இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இன்றையதின(8) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர்,
“இலங்கை வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலே பெண்களை எதற்கும் துணிந்த ஒன்றுக்குமே பயப்படாத ஒரு பெண் இனமாக தலை நிமிர செய்யத தமிழீழ விடுதலைப்போராட்டம் 1983ஆம் ஆண்டு ஆரம்பமானது.
வரலாற்றை திரும்பிப்பார்க்கும் போது, ஆண்களாலும் செய்யகூடிய வேலைகளை பெண்களாலும் செய்ய முடியும் என்ற வரலாற்றை எழுதிச்சென்ற தமிழினம் நாங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பான முழுமையான காணொளியில் காணலாம்…