கடந்த சில மாதங்களாக இலங்கையில் (sri Lanka) தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
அண்மையில் சடுதியாக அதிகரித்த தங்க விலை நேற்று (11) குறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனடிப்படையில், இன்றைய (12.11.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 769,687 ரூபாவாக காணப்படுகின்றது.
இன்றைய நிலவரம்
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,150 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 217,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,890 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 199,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,760 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 190,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.
செட்டியார் தெரு நிலவரம்
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 212,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று (22 karat gold 8 grams) 196,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.