முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தங்க நகை வாங்கவுள்ள இலங்கையர்களே அவதானம்! சிந்தித்து செயற்படுங்கள்

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து கொண்டே வருகின்றது. 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது அவுன்ஸ் ஒன்று இலங்கை ரூபாவின் படி  தொடர்ந்தும் 10 இலட்சம் ரூபா என்ற மட்டத்தில் காணப்படுகின்றது. 

கடந்த ஒன்பதாம் திகதி இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், உலக சந்தையில் தங்கம் அவுன்ஸ் ஒன்றின் விலையானது 988,455.39 ரூபாவாக காணப்பட்டது. 

அதிகரிக்கும் போக்கு

இதேவேளை, உள்ளூர் சந்தைகளிலும் தங்கத்தின் விலையானது அதிகரித்த போக்கையே காட்டுகின்றது. 

தங்க நகை வாங்கவுள்ள இலங்கையர்களே அவதானம்! சிந்தித்து செயற்படுங்கள் | Today Gold Rate World Market Gold Price Change  

24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது கிட்டத்தட்ட 3 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக  தரவுகள் தெரிவிக்கின்றன.  2 இலட்சத்து 80ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக 24 கரட் தங்கத்தின் விலை பதிவாகியுள்ளது. 

கடந்த 9ஆம் திகதி நிலவரப்பட்ட 2 இலட்சத்து 79ஆயிரம் ரூபாவாக 24 கரட் தங்கப் பவுனொன்றின் விலை பதிவாகியிருந்தது. 

மேலும், 22 கரட் தங்கத்தின் விலையும் விரைவில் 3 இலட்சம் ரூபாவை அண்மிக்கலாம் என்ற நிலையில் உயர்ந்து செல்கின்றது.  2 இலட்சத்து 65ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக 22 கரட் தங்கத்தின் விலை பதிவாகியுள்ளது.

தங்க நகை வாங்கவுள்ள இலங்கையர்களே அவதானம்! சிந்தித்து செயற்படுங்கள் | Today Gold Rate World Market Gold Price Change

கடந்த 9ஆம் திகதி நிலவரப்படி, 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 2 இலட்சத்து 56ஆயிரம் ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

எவ்வாறாயினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து சற்று மாற்றம்  பெறலாம். குறிப்பாக ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே தங்கநகை வாங்க காத்திருப்பவர்கள் சந்தை நிலவரங்களை ஆராய்ந்து நகை கொள்வனவில் ஈடுபடுவது சிறந்தது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்