இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளின் போது பிரதி அமைச்சர் ரத்ன கமகே மற்றும்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வேதாராச்சி இடையே
வார்த்தை மோதல் ஏற்பட்டது.
தனது பல நாள் படகுகளுக்கு மானியமாக நாடாளுமன்ற உறுப்பினர் வேதாராச்சி 42,000
மற்றும் 52,000 ரூபாய்களை பெற்றதாக அமைச்சர் தெரிவித்ததை அடுத்து, இந்த
வாக்குவாதம் ஏற்பட்டது.
“நீங்கள் மானியங்களைப் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் பொய்களைச்
சொல்கிறீர்கள். இது அநாகரிகமானது” என்று பிரதி அமைச்சர் கூறினார்.
மாதாந்த மானியம்
“இந்த கருத்தை நிரூபிக்க எங்களிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளன, எங்களை
எதிர்கொள்ளத் துணியாதீர்கள் என்று அவர் தெரிவித்தார்.
பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் வேதாராச்சி, ஒரு முறை மட்டுமே மானியம்
பெற்றதாகக் கூறினார்.
“எனக்கு மானியம் ஒரு முறை மட்டுமே வழங்கப்பட்டது. இருப்பினும், மாதாந்த
மானியத்தைப் பெற எனக்கு உரிமை உண்டு” என்று அவர் குறிப்பிட்டார்.