நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தில் செயலிழந்த மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் இன்று மீள செயல்படத் தொடங்கியுள்ளதுடன் பொறியாளர்களின் கண்காணிப்பில் இயந்திரங்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, குறித்த இயந்திரங்களின் செயற்பாட்டின் அடிப்படையில் நாளைய தினம் (14) மின்வெட்டு தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மின் தடை
பாணந்துரை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட அவசர நிலை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.
சுமார் 6 மணித்தியாலங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் படிப்படியாக மின் விநியோகம் வழமைக்கு திரும்பியிருந்தது.
இந்த நிலையிலேயே நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் 3 மின்னுற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.