மலையக தொடருந்து மார்க்கத்தில் தொடருந்து ஒன்று தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவு நேர தபால் தொடருந்தே தடம்புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சீரற்ற காலநிலை
கலபொட தொடருந்து நிலையத்திற்கு அருகில் குறித்த இரவு நேர தபால் தொடருந்து தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்வதுடன் காற்றும் வேகமாக வீசுகின்றது.
இதனால் பல பிரதேசங்களில் மரங்கள் பாதையில் முறிந்து விழுந்து, போக்குவரத்தும் தடைபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

