குருநாகலில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லவிருந்த ரயில், அதன் சாரதியின் செயற்பாட்டால் சுமார் ஒன்ரை மணித்தியாலங்கள் தரித்து நின்றுள்ளது.
சர்ச்சைக்குரிய ரயில் ஓட்டுநரின் பெட்டியில் உணவுப் பொதி சரியான நேரத்தில் இல்லாததால் ரயிலை இயக்க ஓட்டுநர் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சாரதியின் செயற்பாடு குறித்து ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பயணிகள்
இந்த 20 ஆம் திகதி மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நேரத்தில் ரயிலை இயக்க மறுத்த இந்த ஓட்டுநரால் பெருமளவு பயணிகள் சிரமப்பட்டனர்.
பயணிகளின் கடுமையான எதிர்ப்பினை அடுத்து சுமார் ஒரு மணி நேர தாமத்தின் பின்னர் ரயிலை இயக்க ஓட்டுநர் நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

