பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொடருந்து நிலைய அதிபர்கள் உட்பட சுமார் ஆயிரம் தொடருந்து ஊழியர்களுக்கு பதவி விலக்கல் கடிதம் தயார் செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தொடருந்து நிலைய அதிகாரிகள், தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள், துணை தொடருந்து நிலைய அதிபர்கள் ஆகியோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு பதவி விலக்கல் கடிதங்கள் அச்சிடுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று சபை
இந் நிலையில், ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சித்தால், ஒட்டுமொத்த தொடருந்து சேவையின் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராட ஒருபோதும் தயங்காது என தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொடருந்து ஊழியர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மோசமாக செயற்படமாட்டார்கள் எனவும், தமது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்புவதாகவும் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
இல்லாவிடில் இன்று (11) மாலை நிறைவேற்று சபை கூடி தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.