பொலிஸ் துறையின் உயர் பதவிகளில் சில அதிரடி மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கமைய, பொலிஸ் துறையில் உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாற்றங்கள்
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு, ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு இணங்க தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

