அம்பாறை கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த அஞ்சலி நிகழ்வு இன்று (27.11.2024) மாலை ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது, சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்கள் உணர்வுபூர்வமாக நினைவு கூறப்பட்டுள்ளனர்.
உணர்வு பூர்வமான அஞ்சலி
இதன்போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் தமிழர் தாயக பகுதிகள் எங்கும் உணர்வு பூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.