இலங்கையின் முக்கிய சொத்துக்களின் புவிசார் மூலோபாய மகுடமாகும் திருகோணமலை துறைமுகத்தின் மீதான சர்வதேசத்தின் கண்ணோட்டமானது பரந்த பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்தே நகர்ந்து செல்கிறது.
இந்த துறைமுகத்திற்குள் நிலையான தடமொன்றை பதிக்க அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன.
மேலும், கடந்த காலங்களில் திருகோணமலை கடற்படை தளத்தில் இடம்பெற்ற பயிற்சி நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேசம் முழு கவணத்தையும் செலுத்தியமையை காணக்கூடியதாய் இருந்தது.
இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்கு சென்று இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு நாடு திரும்பியுள்ள இந்த சந்தர்பத்தில் திருகோணமலை துறைமுகம் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கும் என சில ஆய்வாளர்களின் கருத்துக்களும் வெளிப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில கலந்துக்கொண்ட கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி கோ. அமிர்தலிங்கம் சில விளக்கங்களை வழங்கினார்.
குறிப்பாக அநுரவின் ஆட்சிக்கு பெரும் சவாலாக திருகோணமலை துறைமுகம் மாறக்கூடும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,