அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,தொழிலதிபர் எலோன் மஸ்க்கை வில்லன்களாக சித்திரித்து கனடாவில் வெளியிடப்பட்ட காமிக்ஸ் புத்தகம், உலகளவில் பேசுபொருளாகி உள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து, பல நாடுகள் மீதும் ஏதேனும் ஒரு சர்ச்சைக் கருத்தை அவ்வப்போது கூறி வருகிறார். அண்டை நாடான கனடாவை, அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக்கவும் முயற்சி செய்து வருகிறார்.
இருப்பினும், ட்ரம்ப்பின் நடவடிக்கைகளுக்கு கனடாவும் பதிலடி கொடுத்து வருகிறது. கனடா மீது அமெரிக்கா விதித்த வரிக்கு பதிலடியாக, தானும் வரி விதிப்பதாக கனடா அறிவித்தது.
பிரதான மற்றும் இரண்டாம் தர வில்லன்கள்
இந்த நிலையில், கனடாவில் இருந்து காமிக்ஸ் புத்தகமான கேப்டன் கனக் கதையில் டொனால்ட் ட்ரம்ப்பை வில்லனாகச் சித்திரித்து வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, எலோன் மஸ்க்கை ட்ரம்ப்பின் நண்பராகவும் இரண்டாம்தர வில்லனாகவும் சித்திரித்து வெளியிட்டுள்ளது.