டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள நிலையில், அவரின் நிர்வாக கட்டமைப்பில் படிப்படியாக முக்கிய நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, இஸ்ரேலுக்கான புதிய உயர்ஸ்தானிகராக மைக் ஹக்கபியை (Mike Huckabee) அவர் பரிந்துரைத்துள்ளார்.
ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி செனட் சபையின் கட்டுப்பாட்டையும் பெரும்பான்மையையும் கொண்டுள்ளது.
இலஞ்சக் குற்றச்சாட்டு வழக்கு
இந்நிலையில், ட்ரம்ப்பின் நிர்வாகத்தில், அவரின் நம்பிக்கையை பெற்றவர்கள் மற்றும் முக்கிய கூட்டணி உறுப்பினர்கள் இடம்பெறவுள்ளனர்.
இதேவேளை, நியூயோர்க் நீதிமன்றத்தில் ட்ரம்ப் மீது தொடரப்பட்ட இலஞ்சக் குற்றச்சாட்டு வழக்கின் தீர்ப்பு நவம்பர் மாதம் 19 வரை ஒத்திக்கிவைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கின் தீர்ப்பு அவருக்கு எதிராக மாறும் வாய்ப்பு குறைவாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.